இன்று 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

தமிழகத்தில் கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்பதும் அதன் பின்னர் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாக பின்வரும் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இன்று மழை வேறு மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment