#Breaking முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு… ஆனா ஒரு கன்டிஷன்!

தெய்வமாக வழிபடும் ராமர் கால் தடத்திற்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த திட்டத்தை பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். 1967ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா, கலைஞருக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மீனவர்கள் வாழ்வு செழிக்கும்.

1998ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இத்திட்டத்துக்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கினார், பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது.

2004ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ₹247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் 50% முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.

இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டார்.

இத்திட்டத்தின் மூலம் 50,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; இவையெல்லாம் தான் அப்போது கலைஞர் சுட்டிக்காட்டியவை, இவை அனைத்தும் நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாக பேச விரும்பவில்லை எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பாஜக அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை போராடியும், வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என கூறி தனது உரையை நிறைவு செய்தார்

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசிய, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தால் அதனைப் பற்றி பேச வேண்டும் ஆனால் ராமர் ராமாயணத்தை பற்றி சிலர் பேசுகிறார்கள் அதனை எதிர்க்க கூடாது தெய்வ நம்பிக்கை என பேசுவது எப்படி இயக்க முடியும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது.

தெய்வ வழிபாட்டை குறை சொல்வதைக் கேட்க முடியாது அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மதத்தைப் பற்றியோ , தெய்வத்தை குறை சொல்லி யாரும் பேசவில்லை. தெய்வங்கள் பெயரை சொல்லி சில திட்டத்தை செய்ததாக பேசினார்கள் எனத் தெரிவித்தார்.

சேது சமுத்திர திட்டம் வருமானால் எங்களை விட மகிழ்ச்சி அடைவது யாரும் இல்லை அதைவிட ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி எதுவும் இல்லை எனத் தெரிவித்த நயினார் நாகேந்திரன், வாஜ்பாய் காலத்தில் ஆய்வுகள் செய்யப்பட்டு மன்மோகன் சிங் காலத்தில் அடிக்கல் நாட்டினார்

தெய்வமாக வழிபடும் ராமர் கால் தடத்திற்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த திட்டத்தை பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம் எனக்கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.