தொடர் தங்கத்தின் விலை வீழ்ச்சி! அள்ளி செல்ல காத்திருக்கும் நகைப்பிரியர்கள்!!

உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். ஆனால் தங்கத்தின் விலை மட்டும்  எப்பொழுதும் நிரந்தரமாக இருக்காது. ஏனென்றால் தங்கத்தின் விலை மணிக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும்.

gold rate 1200

இந்த நிலையில் நம் தமிழகத்தில் தொடர்ந்து தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக காணப்படுகிறது. நாம் தொடர்ச்சியாக நாள்தோறும் தலைநகர் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய தினமும் சற்று தங்கத்தின் விலை குறைந்து விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 16 குறைந்துள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 486 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சி காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 35 ஆயிரத்து 888 விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால் நேற்றைய தினத்தை விட என்ற தங்கத்தின் விலை சற்று குறைவாகவே காணப்படுகிறது. தங்கம் மட்டுமின்றி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ 65.35க்கு விற்பனை  செய்யப்படுகிறது நேற்றைய தினம் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 66.30 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment