Connect with us

தனுஷுடன் இணைந்துள்ள சீரியல் நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?

1641536576220

பொழுதுபோக்கு

தனுஷுடன் இணைந்துள்ள சீரியல் நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, தனுஷ் தற்போழுது வாத்தி, நானே வருவேன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

20220127112657

இந்நிலையில் சமீபத்தில் நானே வருவேன் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விரைவில் இந்த படம் திரைக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கயுள்ளார்.

ஷாருக்கானின் ஜவான் படப்பிடிப்பு சென்னையில்லையா ? கேமியோவாக வரும் தீபிகா படுகோன் !

screenshot1831 1661074898 1

இந்நிலையில், விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார்.வாத்தி படப்பிடிப்பில் தனுஷ், பிரவீனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top