
பொழுதுபோக்கு
டிக்டாக் ஜி பி முத்துக்கு தனி கேரவன் !!.. அப்படி எந்த படத்தில் நடிக்கிறார்?? ..
டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. இவரின் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவர் சொந்தமாக யூ டியூப் சேனல் தொடங்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் சேனலுக்கு சுமார் 9 லட்சத்திற்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவிற்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளது. தமிழில் சன்னிலியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கயுள்ளார் ஜி.பி.முத்து.பம்பர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வெற்றி – ஷிவானி கூட்டணியுடன் ஜி.பி.முத்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஜிபி முத்து துப்பாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இதை தொடர்ந்து வேறு சில படத்திலும் இவர் நடித்துவருகிறார் .
அந்த வகையில் அதை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் ஜிபி முத்து நகைச்சுவை நாயகனாக நடிக்க உள்ளார்.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நம்ம ஜிபி முத்துவும் நடிக்க உள்ளார்.இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கயுள்ளார் . நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தாய் சரவணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
1980ஆண்டு காலத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
பிக்பாஸ் 6 -ல் இமான் முதல் மனைவி?.. வெளியான முக்கிய தகவல்!!.
இதில் மிக சிறப்பான விஷயம் எது என்றால் நடிகர் ஜிபி முத்து அவர்களுக்கு இந்த படத்தில் நடிப்பதனால் தனி கேரவன் கொடுத்துள்ளார்கலாம்.இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு ஆகும் .தற்போழுது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பற்றாக்குறை இருந்து தான் வருகிறது.அனைத்து காமெடி நடிகர்களும் ஹீரோவாக மாறியதால் தற்சமயம் ஜிபி முத்து போன்ற நடிகர்களுக்கும் அதிகம் வரவேற்பு கிடைத்துள்ளது.
