அடி தூள் ..! அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ..
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. குறிப்பாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச டிக்கெட் போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு தனியாக படுக்கை வசதி ஒதுக்கீடு செய்வதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு தனி படுக்கை வசதி அமைத்து கொடுப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை பெண்கள் மட்டும் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை பெண்களுக்கு தனியாக ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து செல்லும் வரை பெண்கள் முன்பதிவு செய்யாத சூழலில் 2 படுக்கைகள் பொது படுக்கையாக கருதப்பட்டு இந்த படுக்கைகளை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என அரசு விரைவுப் பேருந்து கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசு விரைவுப் பேருந்து கழகம் கூறியுள்ளது.
