அப்போ அது உண்மை இல்லையா? தளபதி 66 குறித்து செந்தில் ராஜலட்சுமி தம்பதி விளக்கம்…..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய அனைத்து பாடல்களுமே நல்ல வெற்றி பெற்றது. குறிப்பாக சின்ன மச்சான் பாடலும், ஆத்தா உன் சேல பாடலும் நல்ல வரவேற்பை பெற்றன.

செந்தில் ராஜலட்சுமி

இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் காரணமாக தொடர்ந்து இவர்கள் இருவரும் மிஸ்டர் அன்டு மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அந்த நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இருவருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தற்போது இருவரும் சினிமாவிலும் பாடி வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளியான சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ஹே சாமி பாடல் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் தான் செந்தில் ராஜலட்சுமி தம்பதி வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியானது. பிகில் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தும் அது கைவிட்டு போனதால் தளபதியே இவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது செந்தில் இந்த தகவலை மறுத்துள்ளனர். இதுகுறித்து செந்தில் கூறியிருப்பதாவது, “நானும், என் மனைவியும் விஜய் 66 படத்தில் பாட்டு பாடியிருப்பதாஇ வெளியான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். இது வெறும் வதந்தி தான். அஜித் படத்துல பாடிட்டோம். விஜய் படத்திலையும் பாட ஆசையா தான் இருக்கு. ஆவலோடு காத்திட்டு இருக்கோம்” என கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் விரைவில் இவர்கள் காம்போ இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் கணேஷ் தற்போது இரண்டு முன்னணி தமிழ் கதாநாயகர்களுக்கு பாடல் பாடியுள்ளார். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளதாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment