Connect with us

ரஜினி கட்சியில் சேருகிறாரா திமுக பிரமுகர்? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு தகவல்

News

ரஜினி கட்சியில் சேருகிறாரா திமுக பிரமுகர்? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு தகவல்


c5fefb2a3c6ae6ba073fac53fcaabca7

இன்று சட்டசபை தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் திமுகவில் தற்போது இருக்கும் செந்தில் பாலாஜி, ரஜினியின் கட்சிக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறினார்
இன்றைய சட்டசபை கூட்டத்தின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது திடீர் திடீரென குறுக்கிட்ட செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுகவுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறியவர் செந்தில்பாலாஜி. அதன்பின்னர் தினகரன் கட்சிக்கு சென்றவுடன் தினகரனுக்காக உயிரையே கொடுப்பேன் என்றார். தற்போது முக ஸ்டாலினுக்காக உயிரையே கொடுப்பேன் என்றார்.

நாளை அவர் ரஜினி கட்சியில் சேர்ந்து ரஜினிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த பேச்சால் சட்டசபையில் சிரிப்பொலி எழுந்தது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top