Connect with us

அண்ணாமலையை ‘அந்த’ வார்த்தை சொல்லி திட்டிய செந்தில் பாலாஜி… அதிரடி பதிலடி!

Senthil balaji

செய்திகள்

அண்ணாமலையை ‘அந்த’ வார்த்தை சொல்லி திட்டிய செந்தில் பாலாஜி… அதிரடி பதிலடி!

அண்ணாமலையை ‘அந்த’ வார்த்தை சொல்லி திட்டிய செந்தில் பாலாஜி… அதிரடி பதிலடி!

அரைவேக்காட்டுத்தனமாக பேசி அண்ணாமலை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கும் துறையாக மாறிவிட்டதாகவும், ஊழல் செய்வதற்காக திட்டமிட்டே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 20-ம்தேதி தூத்துக்குடி மின் நிலையத்தில் 4 மின் உற்பத்தி பிரிவுகள் செயல்படவில்லை. போதுமான மின் தேவை இல்லாததால் நிறுத்தியுள்ளோம் என்ற தகவலை மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்துக்கு தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. 20-ம் தேதி தூத்துக்குடி மின் நிலையத்தில் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இருந்தும் ஏன் உற்பத்தியை தமிழகஅரசு நிறுத்தி வைத்திருந்தது? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஏற்படும் மின் தடை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார், மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை அண்ணாமலை செய்து வருவதாக விமர்சித்தார்.

மேலும், மின்துறை குறித்து எதுவும் தெரியாமல் அரை வேக்காட்டு தனமாக பேசி, மக்களிடம் அச்சத்தை அண்ணாமலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினர். மின்னகத்திற்கு வரும் புகார்களில் 99 சதவீதம் சரி செய்யப்படுவாதாக கூறினார். நமக்கான மின் தேவையை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழகத்தின் இலக்காக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top