மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகள் முடிந்த பிறகு மாதம்தோறும் அளவு கணக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது 1.70 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் மீதமுள்ளவர்கள் இணைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மின் அளவு கணக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.