துப்பாக்கிச் சூடு! சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி மரணம்!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கோயிலில் சாமி சிலையை குப்பையில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டம் குறித்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது குடியிருப்பு பகுதியில் இருந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment