மோடியை கொல்லுங்கள்! காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் கைது!!

பிரதமர் மோடியை கொள்ளுமாறு பேசிய மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜா பட்டேரியா போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் இடையே கடும் மோதல்கள் நிலவிவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியை கொலைசெய்ய வேண்டும் என்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.

மாநகராட்சி தேர்தலில் தோல்வி: பாஜக தலைவர் ராஜினாமா..!!!

இத்தகைய வீடியோவானது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நாட்டின் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் சமூக ரீதியான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் அரசியல் ரீதியாக மட்டுமே அவரை கொல்ல வேண்டும் எனவும், இத்தகைய பேச்சானது திசை திருப்பும் முயற்சியாக உள்ளதாக ராஜா பட்டேரியா விளக்கம் கொடுத்திருந்தார்.

உஷார்! 15 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

இருப்பினும் பன்னா காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.