மீண்டும் ஆளுநருக்கு நீட் மசோதாவை அனுப்பினால் நிராகரிக்க முடியாது! சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்த தீர்மானம்!!

இன்று காலை தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக ,அதிமுக கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஆலோசனை மேற்கொள்ள சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இத்தகைய முடிவு நிறைவேற்றப்பட்டது.

நீட் மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை நிராகரிக்க முடியாது என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment