இனி வாட்ஸ் அப்பில் இதை அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை… அதிரடி உத்தரவு!

இனி வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய வடிவ இமோஜியை அனுப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ் அப் மூலமாக சிவப்பு நிற இதய குறியீட்டைக் கொண்ட இமோஜியை அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. சவுதி அரசின் சைபர் க்ரைம் சட்டத்தின் படி 1 லட்சம் சவுதி ரியான் அபராதத்துடன் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டுமாம்.

இனி வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய வடிவ இமோஜியை அனுப்பினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் அப்பில் இத்தகைய ஆட்சேபணைக்குரிய இதயக்குறியீடுகள் அதிக அளவில் அனுப்பப்படுவதாக எழுந்த புகார் வந்தால், அந்த புகார் பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி சைபர் க்ரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.