செமஸ்டர் மறுதேர்வு: அண்ணா பல்கலையின் முக்கிய அறிவிப்பு

877a77b0b2a3e62e8a953c7e057067b5

செமஸ்டர் மறுதேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முந்தைய எழுத்து தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறுதேர்வு செமஸ்டர் வினாத்தாள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு செமஸ்டர் வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் இருக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

மேலும் செமஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஜூன் 12ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் புத்தகத்தை பார்த்து எழுதும் வகையில் தேர்வு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது முந்தைய தேர்வு முறை எழுத்து தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறு தேர்வு வினாத்தாள் அமைப்பு இருக்கும் என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment