செமஸ்டர் விவகாரம்..! – “மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறி போக வாய்ப்பு ?

பெரியார் பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் அச்சடிப்பது குறித்து தாமதமே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டின் இறுதி தேர்வுகள் மே மாதம் முடிவடையும் என கடந்த ஜனவரி மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது ,ஆனால் இப்போது தேர்வுகள் மே 25ஆம் தேதி தொடங்கி ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் இணைவு பெற்ற கல்லூரிகளும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், ஜூன் மாதம் இரண்டாம் வாரம் தேர்வு முடிவு அடைந்து விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மேலும் ஒரு மாதம் காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இனி தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் மத்தியில் மட்டுமே வெளிவரும் சூழலால் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் உயர்கல்வி இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

ரயில்வே பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்க திட்டம்!

மாணவர்களின் இறுதியாண்டு மதிப்பெண் தேர்ச்சி வெளியான பின்னரே அடுத்து அவர்கள் உயர் கல்வி குறித்து முடிவெடுக்க முடியும் என்பதால் இந்த கால தாமதம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் கவலை அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.