டிசம்பர் 13ஆம் தேதி செமஸ்டர் எக்ஸாம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு;

நேற்றைய தினம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதன்படி இந்தாண்டுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி எழுத்துத்தேர்வு முறையாக நடைபெறும் என்று கூறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் இணையதளத்தில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் எக்ஸாம் நடத்தவே விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆயினும் நேற்றையதினம் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் எக்ஸாம் எழுத்து தேர்வு என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகம்

இன்றைய தினம் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நேரடி செமஸ்டர் தேர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நேரடி செமஸ்டர் தேர்வுக்கான நடக்கும் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் மாதம் 13ம் தேதி முதல் நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கு முப்பத்திமூன்று மையங்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கும் நேரடி செமஸ்டர் தேர்வு தான் நடைபெறும் என்பதனை அண்ணா பல்கலைக்கழகம் உறுதியோடு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment