தமிழ்நாட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஜாக்பாட்! அடுத்தடுத்து வெளிவரும் அறிவிப்பு!!

வெள்ளிக்கிழமை நம் தமிழகத்தில்  கோலாகல பண்டிகை நடைபெற உள்ளது. அது என்னவென்றால் தமிழர்களின் உரித்தான பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடை களிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும்.

இந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 21 தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் மட்டும் வெல்லம் மிளகு போன்றவை காணப்படுகிறது. இந்த சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றுமொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது வரை 65 சதவீதத்திற்கும் அதிகமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதால் வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment