செல்வச்செழிப்புள்ள வீடு -திருப்பாவை பாடலும், விளக்கமும் – 12


9a39b21e22cc0a4bcd93c149295ee7ec

பாடல்

கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைக் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து — ஏலோர் எம்பாவாய்.

பொருள்

எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி
இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்
இதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே !
பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள்
உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.
இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம்
நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா
வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.

விளக்கம்

போஷாக்கு அதிகமாய் கிடைக்கும் எந்த உயிரினத்து தாயாகினும் அதன் பால்மடி நிரம்பி இருக்கும். சேய் உண்ணாதபோதும் அவ்வப்போது பால் சுரந்து வெளியேறும். அதுமாதிரி வளங்கள் நிறைந்திருந்த கோகுலத்து மாடுகள் மடிநிரம்பி பால் வழிந்து வீடு, வாசல்லாம் சேறாகி போச்சுதாம். மாடுகள்கூட போஷாக்குடன் இருக்கும் செல்வச்செழிப்புள்ள வீட்டு சீமானின் தங்கை, ராவணனை கொன்ற ராமனின் புகழ் பாடுவதை கேட்டும் உறக்கம் தெளியாமல் இருக்கிறாயே! என தோழியை துயில் எழுப்புவதாய் அமைந்தது இப்பாடல்..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.