தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’நானே வருவேன்’ என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தனுஷின் தீவிரமான ரசிகர் ஒருவர் ’நானே வருவேன்’ படத்தின் போஸ்டர் ஒன்றை உருவாக்கி இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த செல்வராகவன் நான் இந்தப் இந்த போஸ்டரை மிகவும் ரசித்தேன்’ என்று குறிப்பிட்டு அந்த ரசிகருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
தனுஷ் நடிக்கவிருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் இந்த ஃபேன்மேட் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார் என்பது இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியே ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Liked it. https://t.co/ODUTi0CFr4
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2021