விஜய் படத்தில் செல்வராகவன்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

a8a596ed22f503d013dbcd3a77ee4401

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க செல்வராகவன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளது

விஜய்யின் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே பிரபல மலையாள நடிகர் சாக்கோ என்பவர் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் நிலையில் செல்வராகவன் மெயின் வில்லன் கேரக்டரில் நடிப்பார் என தெரிகிறது

முதல் முறையாக விஜய் மற்றும் செல்வராகவன் இணைந்து ஒரே படத்தில் நடிக்க என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.