குஷ்பு இட்லி என்ற பெயரில் ரப்பர் இட்லி விற்பனையா? கொந்தளித்த வாடிக்கையாளர்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பல நாட்களாக குஷ்பு இட்லி என்ற பேரில் 4 நாட்கள் வரையில் கெடாமல் இருக்கும் ரப்பர் இட்லியை வழங்கி வருவதாக தெரிகிறது.

இதனை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு வயிறு வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் இது போன்ற இட்லியை வழங்க வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் ஹோட்டல் உரிமையாளரிடம் தெரிவித்து உள்ளனர்.

ஒரே வீட்டில் 2500 சிம் கார்டுகள்: கேரள தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு!

இருப்பினும் இலாப நோக்கத்துடன் தொடர்ந்து இட்லியை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஹோட்டல் உரிமையாளர் வேற இடத்தில் இருந்து இட்லியை வாங்குவதாக தெரிவித்து உள்ளார்.

அதே போல் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புதுறை அதிகாரி இட்லியை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘தமிழ்நாடு போதைப்பொருள் சந்தைகளம்’- இபிஎஸ் குற்றச்சாட்டு!!

அதே போல் கலப்படம் செய்யப்பட்டது உறுதியானால் உணவகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்கள் சாப்பிடும் இட்லியில் ரசாயனம் கலக்கப்படுவதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.