Connect with us

தங்கத்தை தாண்டி தக்காளி விலை உயர்வு! கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை!!

தக்காளி

News

தங்கத்தை தாண்டி தக்காளி விலை உயர்வு! கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை!!

நம் தமிழகத்தில் பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்டவைகளின் விலை தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இவற்றையும் தாண்டி மிஞ்சும் அளவிற்கு தற்போது தக்காளி விலை அதிகமாக காணப்படுகிறது.

tomato

 

ஏனென்றால் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் அடுத்தடுத்து கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

அதோடு மட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாடகை உயர்வு இப்படி பல காரணங்களால் சந்தைக்கு தக்காளி வரவு மிக குறைந்த அளவே காணப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறையாமல் மொத்த விலை கிலோ 110 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டதால் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளது. மொத்த விலையே அதிகமாக உள்ள நிலையில் சில்லறை வியாபாரிகளிடம் இதைவிட அதிகமாக தக்காளி  விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top