கள்ள லாட்டரி விற்பனை, அரசு ஊழியர்களை விரட்டும் திமுகவினர்..!! பொங்கிய இபிஎஸ்;

சில வருடங்களுக்கு முன்பே நம் தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் கூட ஆங்காங்கே சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக காணப்படுகிறது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி குரல் கொடுத்துள்ளார்.

அதன்படி கள்ள லாட்டரி விற்பனை மற்றும் ஆளும் கட்சியினர் அத்துமீறலால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். கள்ள லாட்டரி விற்பனையை தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மேலும் கிராம ஊராட்சி செயலாளர் சேகர் ராஜசேகரன் தனது தற்கொலைக்கு காரணம் திமுக கவுன்சிலர் ஹரி என்று கூறினார், என்றும் கூறியுள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக திமுக கவுன்சிலர் மீது புகார் கூறும் வண்ணமாக கடிதம் எழுதிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு நான் காரணமில்லை என்று திமுக கவுன்சிலர் ஹரியும் கூறியுள்ளார். இந்த நிலையில் அரசு ஊழியர்களை திமுகவினர் மிரட்டுவதை காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment