
Tamil Nadu
பெற்றோர் செய்த காரியமா இது!! நான்கு ஆண்டுகளாக சிறுமியின் கருமுட்டை விற்பனை!!!
தற்போது உலகில் பல இடங்களில் உடல் உறுப்புகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் பல இடங்களில் கட்டாயத்தின் பெயரில் உடல் உறுப்புகள் ஆங்காங்கே மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் சிறுமி ஒருவரின் கருமுட்டையை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த தந்தை உட்பட மொத்தம் 3 பேர் கைதாகியுள்ளனர். நான்கு ஆண்டுகளாக பல கருத்தரிப்பு மையங்களில் கருமுட்டையை விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
தரகராக செயல்பட்ட மாலதி, சிறுமியின் தாய் இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சையது அலி ஆகியோர் கைதாகியுள்ளனர். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருமுட்டையை ஒவ்வொரு முறையும் ரூபாய் 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த மோசமான கும்பல் சிறுமிக்கு 20 வயது என போலியான ஆதார் அட்டை தயாரித்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
