காவல்துறையில் முதல் முறையாக SPECIAL BRANCH பிரிவில் 58 பணியிடங்களுக்கு தேர்வு!
இன்று மதியம் சென்னை பூங்கா நகரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தேர்வு குறித்த சில முக்கிய விதிமுறைகளையும் தகவல்களையும் அவர் பேட்டி அளித்துள்ளார். அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதி வரும் 23ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
300 மதிப்பெண் கொண்ட 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதில் தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார். ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் மொத்த மதிப்பெண் 300 ஆகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார்.
காவல்துறையில் முதல் முறையாக ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவில் 58 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார். தேர்வின்போது கருப்பு மை கொண்ட பேனா, ஜெல் பேனா, பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.
காலை 09:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை குரூப் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறினார். பிற்பகலில் நடைபெறும் தேர்வில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறினார்.
