News
அங்கீகாரமில்லாத “பத்துரூபாய்” குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்!!!
தற்போது நம் தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விருப்பம் குறைந்து காணப்படுகிறது. மேலும் இளைஞர்களும் வெளிநாட்டு குளிர்பான மீதான மோகத்தை தவிர்த்துள்ளனர். இதனால் தற்போது தமிழகத்தின் உள்ளூர் குளிர்பானங்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக 200ml பத்து ரூபாய் குளிர்பானத்தின் எண்ணிக்கையானது தமிழகத்தில் உள்ள பட்டிதொட்டி கிராமங்கள் தோறும் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் பல குளிர்பானங்கள் அங்கீகாரம் இல்லாமலும் தயாரிக்கப்படுவது அவ்வப்போது தெரிகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பத்து ரூபாய் குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடையில் ஆய்வு செய்து அதன் பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ் பேட்டியளித்துள்ளார்.
கடையில் இருந்த குளிர்பான பாட்டில்கள் கிங் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் புதுவண்ணாரப்பேட்டை கடையில் இருந்த காலாவதியான குளிர்பானங்கள் போன்றவைகளை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பத்து ரூபாய் பாட்டில் குளிர்பானத்தை குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததை பூட்டப்பட்ட கடையில் ஆய்வு செய்துள்ளனர்.
