36 இடங்களில் சோதனை! கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, பணம் பறிமுதல்!!

சில நாட்களாகவே தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் இடங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் வரிசையாக இன்று காலை இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெற்றது.லஞ்ச ஒழிப்புத்துறை

இவர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் ஆர்.இளங்கோவன். அவருக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் இன்றைய தினம் சோதனை நடைபெற்றது. சென்னை, சேலம் உட்பட மொத்தம் 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பெரும் சோதனை நிகழ்த்தினர்.

கூட்டுறவு சங்க மாநில தலைவர் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 29.77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் 21.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 282 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு கார்கள் பறிமுதல் செய்தனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர். 68 லட்சம் வைப்புத் தொகைக்கான வங்கி கணக்கு புத்தகம் பல சொத்து ஆவணங்கள் பறிமுதல் எனவும் லஞ்ச ஒழிப்பு துறையில் தகவல் அளித்துள்ளனர்.

இவர் அதிமுகவின் ஆட்சியின் போதே சோதனை இவருக்கு சொந்தமான பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment