நியாயவிலைக் கடையில் மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகின்றன. இந்த அரிசிகளையும் அவ்வப்போது பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் மதுரையில் 200 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து மதுரையில் 20 ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது,
மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஒரு நெல் அரவைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்மேடு ஆலையில் ரேஷன் அரிசி டன் கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி-க்கு ரகசிய தகவல் வந்தது.
எஸ்பி பாஸ்கரன் போலீசுடன் குடோனுக்கு சென்று சோதனையிட்டதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி ஆலை அருகில் குடோனுக்குள் ஆயிரக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தனர்.
குடோனில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியது. 200 டன் ரேஷன் அரிசி, குடோன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 லாரிகளை போலீஸ் பறிமுதல் செய்தது. ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக குடோன் பணியாளர்கள், லாரி ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.