வெயில் காலம் வந்தாலே கொஞ்சம் உஷார் மக்களே..!! செயற்கையாக பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல்!!
நம் தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி விட்டதால் உடம்புக்கு குளிர்ச்சி அளிக்கும் பழங்கள் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் பழங்களின் விலை அதிகளவில் காணப்படுகிறது.
ஒரு சில இடங்களில் வியாபாரிகள் செயற்கையான முறையில் பழங்களை பழுக்க வைக்கின்றனர். அதுவும் குறிப்பாக மாங்காய்களை கல் வைத்து பழுக்க வைத்து விற்பனை செய்வது ஆங்காங்கே நடைபெறும் .
இதனை கண்டறிந்து அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்யப்படும். ஏனென்றால் அவை வயிற்றுக்கும் உடலுக்கும் மிகவும் கேடு விளைவிப்பதாக காணப்படும். அதன் வரிசையாக தற்போது எலுமிச்சை பழங்களும் அவ்வாறு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் கிட்டத்தட்ட 100 கிலோ எலுமிச்சைப் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. மயிலாடுதுறையில் செயற்கையாக பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செயற்கையாக பழங்களை பழுக்க வைத்த வியாபாரிக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பழங்களின் விலை உயர்ந்த ஒரு எலுமிச்சை பழம் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
