விஜய் அரசியலுக்கு வந்து அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும்.. சீமான்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் என்றும் அவ்வாறு அரசியலுக்கு வந்தால் நான் அவரை ஆதரிக்க மாட்டேன் என்றும் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும் இந்த அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அம்பேத்கர் சிலை மற்றும் தீரன் சின்னமலை சிலை ஆகியோர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருவதை அடுத்து விரைவில் அரசியலில் குதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

vijay (1)2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தமிழக அல்லது புதுவையில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு தாராளமாக வரட்டும், அதை வரவேற்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் நான் அவரை ஆதரிக்க மாட்டேன், அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விஜய் அரசியலை நோக்கி வருவது அவரது இயக்கத்தினரின் செயல்பாடு மூலம் தெரிய வருகிறது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் சீமான் சொல்வது போல் அவரை ஆதரிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.