வெளியாகி ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் அல்டிமேட். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பிக் பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் உள்ளனர்.
அதிலும் குறிப்பாக வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் போன்ற சுவாரஸ்யத்தை அள்ளிக்கொடுக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் காணப்படுகின்றனர். இங்கு நாள்தோறும் விதவிதமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று கேப்டன் பதவிக்கான போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் அடுத்த வார தலைவராக தகுதி உள்ளதாக தேர்ந்தெடுக்கப்பட சுரேஷ் மற்றும் பாலாஜிக்கு இறுதிகட்ட போட்டியாக இது அமைந்துள்ளது.
அந்த டாஸ்க்-க்கு பிக்பாஸ் அல்டிமேட் தூக்கு-துறை என்று பெயர் வைத்துள்ளது. இதில் சுரேஷ் மற்றும் பாலாஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் போட்டியாளர்களுக்கே இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
அந்தப்படி மரத்தாலான நாற்காலியில் இரண்டு நீண்ட கட்டைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் கேப்டனாக தகுதி பெற்றுள்ள இரண்டு பேரும் தங்களது இருக்கையில் அமர்ந்திருக்க அவர்கள் கேப்டனாக வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் சக போட்டியாளர்கள் கட்டையை பிடித்து தூக்க வேண்டும்.
யாரின் நாற்காலி தரையைத் தொடாமல் இருக்கிறதோ அவரே அடுத்த வார பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிகளவு போட்டியாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.