அண்ணாமலைக்கு அனல் பறக்கும் பாதுகாப்பு!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

மாவோஸ்டுகளிடமிருந்தும் மத தீவிரவாதிகளிடமிருந்தும் மிரட்டல் வந்ததால் தற்போது Y பிரிவு பாதுகாப்பில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் 20க்கும் மேற்பட்ட கமேண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுக்க உள்ளனர். இதனால் அவரது வீடு அவர் தாங்கும் இடம் போகும் இடங்கள் 24 மணி நேரமும் கமேண்டோ வீரர்கள் பாதுகாப்பு தருவார்கள் என கூறப்படுகிறது.

இரண்டு நாட்களாக மத்திய உள் துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலை வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வந்து சோதனை செய்து சென்றுள்ளனர். அதற்கான ஒப்புதல் கையொப்பமும் அவரிடம் இருந்து பெறப்பட்டது.

ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி செய்தி! விரைவில் முந்துங்கள்!

Z பிரிவு பாதுகாப்பு வழங்கும் தனி படைக்கு மாதம் 16 இலட்சம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்திற்கும் அண்ணாமலை அவர்களுக்கு இந்த பாதுகாப்பு விரைவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.