Connect with us

7 கோடி ஓவியத்தை நாசம் செய்த செக்யூரிட்டி!! அடுத்து நடந்த தரமான சம்பவம்..

2016 2largeimg28 Sunday 2016 011801136

செய்திகள்

7 கோடி ஓவியத்தை நாசம் செய்த செக்யூரிட்டி!! அடுத்து நடந்த தரமான சம்பவம்..

7 கோடி ஓவியத்தை நாசம் செய்த செக்யூரிட்டி!! அடுத்து நடந்த தரமான சம்பவம்..

ரஷ்யாவில் பலங்கால ஓவியத்தில் கண்கள் வரைந்து விளையாடிய காவலாளிக்கு ஆறுதல் கூறும் வகையில் ஆனந்த் மஹிந்திரா ஐடியா கொடுத்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் yeltsin என்ற கண்காட்சி அரங்கத்தில் புகழ்பெற்ற ஓவியர் Anna leporekaya வரைந்த ஓவியம் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

மூன்று உருவங்கள் கொண்ட அந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகும். இந்த ஓவியம் 7.5 கோடி அளவில் ஆல்பா என்கிற தனியார் ரஷ்யன் நிறுவனத்தால் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் yeltsin என்ற கண்காட்சி அரங்கத்தில் புதிதாக அரங்கத்தில் சேர்ந்த காவலாளி ஒருவர் இந்த மூன்று ஓவிய உருவத்தையும் கண்டு அதற்கு தனது பேனாவால் ரவுண்டு போட்டு கண்கள் வரைந்துள்ளார்.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகம் அந்த ஓவியத்தை அங்கிருந்து அகற்றி நிபுணர்களை வைத்து ஓவியத்தில் தன்மை கெடாமல் அதில் வரியப்பட்ட கண்களை நீக்கி வருகின்றனர்.

மேலும், இதற்கான செலவு மட்டும் இந்திய மதிப்பில் ரூபாய் இரண்டரை லட்சம் ஆகும் என நிர்வாகம் தெரிவித்து இருந்தது.அதுமட்டுமின்றி அந்த பணத்தை தவறு செய்த காவலாளி தான் கொடுக்க வேண்டும் என நிர்வாகம் கூறியது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து இதற்கு ஐடியா கொடுத்த ஆனந்த் மஹிந்திரா இதற்காக வருத்தப்படாமல் அந்த ஓவியத்தை NFT யாக விற்பனை செய்யலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.

அதாவது Non- funglble token என்று அழைக்கப்படும் NFT பல மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. NFT என்பது சொந்தமாக தயாரிக்கப்படும் புகைப்படம் ,ஆடியோ மற்றும் வீடியோவை விற்க்க மற்றும் வாங்க பயன்படுத்து ஒரு முறை ஆகும்.

இதில் விற்க்கப்படும் புகைப்படத்திற்கு ஒரு நிரந்தர வரிமானம் உண்டு. இந்தோனேஷியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் தினமும் எடுத்த செல்பிகளை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களில் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆனந்த் மஹிந்திரா இதை குறிப்பிட்டுதான் டுவிட் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top