முதல் நாள் காதலியுடன் ரகசிய திருமணம்;; அடுத்த நாள் வேறு பெண்ணுடன் எஸ்கேப் !! பின்னணி என்ன ?

தேனியில் தேனி மதுரை சாலையில் இயங்கி வருகிறது பிரபல துணிக்கடை. இந்த நிறுவனத்திற்கு கோயம்புத்தூர், வத்தலக்குண்டு போன்ற பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த துணிக்கடையை தேனியை சேர்ந்த 32 வயதான முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில்  துணிக்கடையில் உள்ள டிசைனர் ஸ்டூடியோ மற்றும் அழகு சாதன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கடையினை பெரிய குளத்தை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் நடத்தி வருகிறார். இவர் தேனி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 11-ஆம் தேதி புகார் ஒன்று கொடுத்திருந்தார்.

அதில் துணிக்கடை முருகனுடன் அப்பெண் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி முருகன் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அப்பெண் புகாரில் கூறியுள்ளார். அதோடு தன்னுடன் ரகசிய திருமணம் செய்த மறுநாள் வேறு பெண்ணை திருமணம் செய்து அமெரிக்கா சென்றுள்ளதாக அப்பெண் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த முருகன் 40 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரை கைது செய்த காவல்துறையினர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிரபல துணிக்கடை உரிமையாளர் இளம் பெண்ணை ஏமாற்றியதால் தேனியில் பரபரப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment