தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ரகசிய ஆவணம் வெளியே கசிந்தது எப்படி என அரசு விளக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆணையம் அமைக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட, விசாரணை அறிக்கைகளை கசிய விட்டது யார் என்பது குறித்தும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே இரகசியத்தை காக்க முடியாத அளவிற்கு தமிழக அரசு உள்ளதா? தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணம் திருடப்பட்டதா? என கூறியுள்ளார்.
அதொடு ரகசிய காப்பு பிரமாணத்தை காக்க தவறியதற்காக தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.