விடிய விடிய இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 107 பேர் மயக்கம்..!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணா விரத போராட்டம் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியம் என்று தமிழக அரசு வழங்கி வருகிறது.

18 குழந்தைகள் பலி! பிரபல நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம்.!!

இதன் காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாத்திக்கப்பட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனையே கடந்த நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிர போராட்டம் நடைப்பெற்று வரும் நிலையில், இதுவரையில் 107 பேர் மயக்கமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த 3 நாட்கள்! வானிலை மையம் நியூ அப்டேட்..!!

அதே போல் சுழற்சி முறையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர் உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் முதலுதவி செய்வதற்கு டிபிஐ வளாகத்திலேயே குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.