இரண்டாவது முறை வெற்றி!! டெல்லி செல்லும் முதல்வர்; யார் யாரை சந்திக்க உள்ளார் தெரியுமா?
இரண்டு நாட்களுக்கு முன்பு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுவும் குறிப்பாக இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக இரண்டாவது முறையாக சரித்திரப் சாதனையில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு மீண்டும் முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்வார் என்றும் பேசப்படுகிறது. இந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி உத்தரபிரதேசத்தில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இன்று டெல்லி செல்கிறார் யோகி ஆதித்யநாத். புதிய அமைச்சரவை, பதவி ஏற்பு தேதி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்த உள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை யோகி ஆதித்யநாத் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
