இந்தியா-அயர்லாந்து 2nd T20: வாஷ் அவுட் செய்யுமா இந்தியா?

சில நாட்களாகவே இந்திய அணி கிரிக்கெட்டில் சொதப்பல் அளித்து வருவதாக தெரிகிறது.  இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டதால் இளம் வீரர்கள் தான் இந்தியஅணியை வழிநடத்தினார்.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் 2-2 என்ற கணக்கில் நடுநிலைமை கண்டது. மேலும் 5வது போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா T20 போட்டியில் தொடர்ந்து இந்தியா தோல்விகளை சந்தித்து கடைசி நேரத்தில் வெற்றிகளைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்தியா தற்போது அயர்லாந்து கனிவோடு இரண்டு 20 ஓவர் போட்டிகளில் சந்தித்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியிலும் இந்தியா வென்று அயர்லாந்தை வாஷ் அவுட் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.