Connect with us

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுச்சேரியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு…!!

Vote symbol

செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுச்சேரியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு…!!

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுச்சேரியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு…!!

தற்போது பிரான்ஸ் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் பிரான்ஸ் நாடு மட்டுமின்றி யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் புதுச்சேரியில் அதிகமானோர் பிரெஞ்சு குடியிருப்போர் காணப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதன்படி புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். புதுச்சேரியில் 2 இடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். முதல்கட்ட தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான், மரின் லிபன் அதிக வாக்குகள் பெற்றனர்.

யாரும் 50 சதவீத வாக்குகள் அதிகமாக பெறாததால் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இமானுவேல் மேக்ரான், மரின் லிபன் இடையே போட்டி நிலவுவதால் இரண்டாம் கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top