வைகை அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!!

9a3dfc7a81031b870c71fef90ee05683

தமிழகத்தில் பல ஆறுகள் காணாமலே போய்விட்டன. காரணம் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆறுகளில் மணல் சுரண்டப்பட்டு வருவதால் ஆறுகள் ஓடும் போக்கை மாற்றி விடுகின்றன. இது நம் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை உருவாக்குகிறது மேலும் பல ஆறுகள் கடலில் கலப்பதாலும் அவற்றிற்கு மாற்றுவழிகள் இல்லாததாலும் மக்களின் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்திலேயே கடலில் கலக்காத ஆறு என்றால் அதனை அனைவரும் கூறுவது வைகை ஆறுதான் மேலும் இவை மதுரை மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காணப்படுகிறது. இந்த ஆற்றில் சில தினங்களாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் வைகை அணையில் தற்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறபடுகிறது.

அதன்படி வைகை அணையில் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 69 எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் அதன் விடப்பட்டு உபரி நீர் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.35a480ba7f9c26c50722d4c945b39a6d

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment