2ம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு: விண்ணப்பதாரர்கள் ஆர்வம்!

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து விண்ணப்பதாரர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.

தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 30ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி அதன் பின்னரும் கடந்த 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் 295 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் அடுத்த கட்ட உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வு முடிவை இணையதளங்கள் மூலம் விண்ணப்பதாரர்கள் பார்த்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.