இரண்டாம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்க விட்ட தலைமையாசிரியர் கைது!

தமிழகத்தில் அவ்வப்போது மாணவர்கள் ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறு துன்புறுத்தும் ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறும்பு செய்த மாணவரை தலைகீழாக ஆசிரியர் பிடித்து  அடித்த சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் உத்தரபிரதேச  மாநிலத்தில் நடந்துள்ளது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் குறும்பு செய்த இரண்டாம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்க விட்டு அதட்டிய தலைமையாசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மிர்ஸாபூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் சிறுவன் சக மாணவனை கடித்து வைத்ததாக கூறப்படுகிறது. கடி வாங்கிய மாணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மேல்தளத்தில் இருந்து கீழே போட்டு விடுவதாக அந்த தலைமையாசிரியர் மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாணவனை தலைமை ஆசிரியை தலைகீழாக பிடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், அந்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment