News
கொரோனாவுக்கு இரண்டாவது பலி: இந்தியாவிலும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மக்களை தாக்கி வரும் நிலையில் இதுவரை 80 பேருக்கு கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூரை சேர்ந்த 76 வயது நபர் ஒருவர் கொரோனா வைரசுக்கு முதல் நபராக பலியானார். இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக தற்போது டெல்லியில் 69 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருடைய மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
