டெல்லியில் இரண்டாவது நாள்: ஸ்டாலினின் திட்டங்கள் என்னென்ன?
நேற்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டார். மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பார்வையிட்டு பின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பி களைசன் நேரில் சந்தித்தார். அதன் பின்னர் அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
சோனியா காந்தியையும் நேற்று சந்தித்தார் ஸ்டாலின் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இன்று நாளை டெல்லி மாநில முதல்வரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார்.
டெல்லி மாநில முதல்வரை சந்தித்து அவரோடு சேர்த்து டெல்லி அரசுப்பள்ளிகள் மொஹல்லா கிளிக்குகளை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிடுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
