டெல்லியில் இரண்டாவது நாள்: யார் யாரை சந்திக்கபோகிறார் முதல்வர்..?
தமிழக முதல்வர் மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் நாளை திறக்க இருக்கிறது.
இதற்காக வருகை தந்துள்ள முதல்வர் பல்வேறு அமைச்சர்களை சந்திக்க இருக்கிறார். இன்று இரண்டாவது பயணமாக காலை 10.30 மணி அளவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின் மூலம் தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் ஜிஎஸ்டி வரிகளை பற்றி ஆலோசிக்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து 11.30 மணி அளவில் டெல்லி அரசுப்பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்கை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து சுமார் 1 மணி நேரம் பார்வையிடுபோவதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது இல்லத்தில் சந்திக்கப்போவதாக தகவல்கள் சந்திக்கப்போவதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் மூலம் தமிழகத்தில் தொழில்கள் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
