சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களுக்கு இரண்டு விமான நிலையகள் தேவை என்பதை கொண்டு நம் தலைநகர் சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்க உறுதிபூண்டு உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
ரூபாய் 30 கோடி செலவில் டெல்லிக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அதேபோல் மும்பையிலும் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் 17,000 கோடி செலவில் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் சென்னையிலும் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். அதற்காக நான்கு இடங்களை மாநில அரசு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரை செய்ததாகவும் தெரிவித்தார்.
மாநில அரசு தேர்வு செய்த நான்கு தளங்களில் இருந்து நாங்கள் இரண்டு தளங்களை தேர்வு செய்துள்ளதாக கூறினார். இருப்பினும் மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் அறிவித்தார். இதனால் விரைவில் நம் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.