ஓடும் பேருந்தில் பயங்கரம்… நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட பயணி..!!

தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் 40% பேருந்துகள் ஓட்டுவதற்கு தகுதியற்றது என கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசு பேருந்துகளில் பயணிக்க பலரும் தயக்கம் காட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பயணிகள் விபத்தில் சிக்குவதற்குள் காலாவதியான பேருந்துகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குமரி மாவட்டம் பளுகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்: பாலிடெக்னிக் மாணவன் கைது!

அப்போது பேருந்தின் சீட் ஒன்று பின்புறமாக திடீரென கழன்று விழுந்தது. இதன் காரணமாக பயணி ஒருவர் இருக்கையோடு ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர்.

இதனால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மேலும், மாநிலம் முழுவதும் சாதாரண மக்கள் நம்பியிருக்கும் அரசு பேருந்துகளில் இத்தகைய சம்பவம் நடைப்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment