சீமான் கருத்து:ஒருபக்கம் சசிகலா! மறுபக்கம் ஈபிஎஸ்!! யாருக்கு ஆதரவு?

இன்றைய தினம் காலை முதலே அதிமுக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன.  சுவாரசியமான நிகழ்வுகள் அதிமுக கட்சியில் காணப்படுகிறது. நாளையதினம் அதிமுக பொன் விழா கொண்டாடுவதற்காக அதிமுக நிர்வாகம் தயாராக உள்ள நிலையில் இன்று காலை சசிகலா திடீரென்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.சசிகலா

அவரின் வருகைக்கு அதிமுக தொண்டர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இது குறித்து நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சீமான்அதிமுகவை கைப்பற்றுவது அவ்வளவு எளிதில்லை என்றும், அதிமுகவை சசிகலா கைப்பற்ற எடப்பாடிபழனிசாமி விட மாட்டார் என்றும் சீமான் கூறியுள்ளார். சசிகலா வருகையால் நிச்சயமாக அதிமுகவில் தாக்கம் இருக்கும் என்றும் ஆனால் எந்த மாதிரியான தாக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சசிகலா வந்தால் நன்றாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.இதனால் சீமான் கருத்தைப் பார்த்தால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் இருந்தாலும்  மறுபுறத்தில் எடப்பாடிபழனிசாமி காத்திருப்பது போல காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment