சென்னையில் உரிமம் இல்லாத கடைகளுக்கு சீல்!!

சென்னை சவுக்கார் பேட்டையில் இயங்கி வந்த 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் வருவாய் இழப்பை சரி கட்டவும், வருவாயை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் கடைகளில் தொழில் வரி செலுத்தாமலும், உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 160 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட கடைகளுக்கு ஏற்கனவே தொழில் வரி செலுத்தவும், நோட்டீஸ் வழங்கிய பின்னரும் உரிய ஒத்துழைப்பு வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீண்ட காலமாக வருவாயை செலுத்தாமல் இருந்ததன் காரணமாக, மாநகராட்சி வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீல் வைக்கப்பட்டுள்ள கடைகள் நிலுவையில் இருக்கக்கூடிய தொழில் வரியை செலுத்தி மீண்டும் கடைகளுக்கான உரிமையை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment